Tuesday, March 25, 2025
இரயில் பயணத்தில்
பாடிக்கொண்டே
கண்தெரியாத ஒருவர்
பிச்சை கேட்டு வந்தார்;
நான் தூங்குவது போல்
கண் மூடிக்கொண்டேன்!
Thursday, January 23, 2025
Wednesday, October 23, 2024
வீட்டிலிருந்து
அனைவரையும்
தப்பிக்க வைத்து
கடற்கரைக்கு
கொண்டு வந்தேன்;
இப்போது
கடற்கரை மணலில்
ஒரு வீடு தயாராகிறது.
இப்போது இதிலிருந்து
தப்பித்து
வீடு செல்ல வேண்டும்.
Tuesday, October 08, 2024
Tuesday, October 01, 2024
Thursday, September 26, 2024
Thursday, September 05, 2024
நாளை முதல்
குடிக்கமாட்டேன்
என்பவனை
நம்பாதீர்கள்.
நாளை மறுநாள் முதல்
குடிக்கமாட்டேன்
என்பவனை
நம்புங்கள்.
Wednesday, September 04, 2024
கடவுளிடம் சமீபத்திய வேண்டுதல்:
தேசிய நெடுஞ்சாலையில்
எதிர் திசையில்
இரு சக்கர வாகனத்தில்
தலைக்கவசம் அணியாமல்,
செல்போனில் பேசிக்கொண்டே,
வண்டியின் முன் சீட்டில்
ஒரு சிறுவனை நிறுத்தி,
பின் சீட்டில்
இருவரை அமர்த்தி,
வேகமாக வண்டி ஓட்டி வரும்
நிறைமாத கர்ப்பிணி யின்
தைரியம்
எனக்கு வேண்டும்.
Wednesday, August 21, 2024
Wednesday, May 22, 2024
Tuesday, April 30, 2024
Monday, March 25, 2024
முற்றும் என்ற
முற்றுப்புள்ளியை,
தொடரும் என்ற
மூன்று புள்ளியாக
மாற்றும் போது
நமக்கு கிடைப்பது
மேலும்
இரண்டு புள்ளிகள்.
Monday, February 26, 2024
Tuesday, January 30, 2024
Tuesday, January 23, 2024
Saturday, January 06, 2024
Wednesday, December 20, 2023
எல்லாம்
ஒரு நாள் மாறும்
என்ற
நம்பிக்கை படி
அந்த
ஒரு நாளுக்கு
காத்திருக்கிறேன்;
சொல்ல மறந்துவிட்டேன்,
இறந்து போன
என் தாத்தாவும்
அப்படி ஒரு நாளுக்கு
காத்திருந்தார்.
காயப்படுத்தாத
மென்மையான
வார்த்தைகளைத்தான்
கவிதைகளில்
பயன்படுத்துகிறேன்;
என்னசெய்வது,
கடைசியில்
திருப்பிவைத்த
கத்தி போல
நிற்கிறது
ஆச்சர்யக்குறி!
Tuesday, December 19, 2023
அண்ணலும் நோக்கினான்,
அவளும் நோக்கினாள்,
அவரவர்கள் மொபைலை;
அங்கு பிறந்திருக்கவேண்டிய
ஒரு காதல்
வேறு இடம் தேடி
சென்றது.
Monday, December 18, 2023
இந்த கடற்கரை
அலை
என் காலை
தழுவும்
போதெல்லாம்
நான்
தாயாகிறேன்.
அது
திருமணகோலத்தில்
அமர்ந்திருக்கும்
என் மகள்
ஆகிறது.
Wednesday, November 22, 2023
Tuesday, October 10, 2023
Tuesday, September 26, 2023
Monday, August 14, 2023
Friday, August 11, 2023
Tuesday, July 25, 2023
Tuesday, July 04, 2023
கோவில் வாசலில்
யார் தலையில்
இருந்தோ
உதிர்த்து கிடைக்கிறது
ஒரு பூ.
அதை
எல்லோர் தலையிலும்
பொருத்திப்
பார்த்துக் கொண்டிருக்கிறேன்.
ஒரு நல்ல
கவிதைக்கு முன்பாக
பல சுமாரான
கவிதைகள் எழுதப்படும்
என்பது ஐதீகம்.
நாம் படிப்பது
அனைத்தும்
நல்ல கவிதைகள்
என்றே நினைப்போம்.
Thursday, June 01, 2023
Sunday, May 07, 2023
Wednesday, May 03, 2023
Wednesday, April 12, 2023
Tuesday, March 28, 2023
Saturday, March 25, 2023
Wednesday, March 22, 2023
Tuesday, March 22, 2022
Friday, March 18, 2022
Saturday, March 12, 2022
Thursday, March 10, 2022
Wednesday, March 09, 2022
Tuesday, March 08, 2022
Sunday, March 06, 2022
Saturday, March 05, 2022
பல வருடம்
கழித்து
சொந்த ஊருக்கு
போகிறேன்.
எல்லோரும்
என்னிடம் கேட்டதை
நான்
ஊரில் ஓடும்
ஆற்றிடம் கேட்டேன்,
'என்னங்க ...
இப்படி
இளைச்சிடீங்க'
Tuesday, February 15, 2022
செல்போன் கையில்
இருக்கிறது;
பத்து நிமிடம் தாண்டியும்
அதை பார்க்காமல்
சாலையை வேடிக்கைப்
பார்த்துக்கொண்டிருக்கிறான்;
சைக்கோ வாக இருக்குமோ
என்று
தள்ளி நிற்கிறேன்;
Sunday, February 06, 2022
Friday, January 21, 2022
Wednesday, January 19, 2022
Saturday, January 01, 2022
Friday, December 31, 2021
Thursday, December 30, 2021
Wednesday, December 29, 2021
இந்த
மூன்று காரணங்களும்
உங்கள் வாழ்க்கையை
பாதிக்காமல்
பார்த்துக் கொள்ளவேண்டும்;
அதற்கு
அந்த
மூன்று காரணங்களை
முதலில் நீங்கள்
கண்டுபிடிக்க வேண்டும்.
Tuesday, December 28, 2021
Monday, December 27, 2021
Sunday, December 26, 2021
தண்டவாளத்தின் நடுவில்
தேங்கிநிற்கும் தண்ணீரில்
நிலவைப் பார்க்கிறேன்;
தற்கொலை
செய்துகொள்ளப் போகிறதோ
என்றெண்ணி
சிறிய கல் எடுத்து அதனுள்
எறிந்துவிட்டு செல்கிறேன்.
Saturday, December 25, 2021
Friday, December 24, 2021
Thursday, December 23, 2021
Wednesday, December 22, 2021
Tuesday, December 21, 2021
கனவில் இன்று
எல்லாம்
சதுர வடிவம்
ஆனது;
சதுரமான பனித்துளி;
சதுரமான நிலா;
சதுரமான பூமி;
சதுரமான மழைத்துளி;
சட்டென்று பதறி
கண்விழித்தேன்;
நான் பார்த்தது,
சதுர இட்லி.
Friday, December 17, 2021
Tuesday, December 14, 2021
Thursday, December 09, 2021
Tuesday, December 07, 2021
Monday, December 06, 2021
Sunday, December 05, 2021
Tuesday, November 23, 2021
அறிவின் படி செயல்படுவதா
அல்லது
உணர்வின் படி செயல்படுவதா
என்று
கலங்கி நிற்கும்
போதெல்லாம்
நான் செல்வது
'உணவின்' வழியில்.
Sunday, November 07, 2021
Friday, November 05, 2021
Monday, November 01, 2021
Sunday, October 31, 2021
Saturday, October 30, 2021
Thursday, October 28, 2021
Wednesday, October 27, 2021
Monday, October 25, 2021
Friday, October 22, 2021
Monday, October 18, 2021
Friday, October 15, 2021
Monday, October 04, 2021
Sunday, October 03, 2021
14 நாட்கள்
தனிமைப் படுத்தப்பட்டு
திருப்பி வந்த
60 வயது பெண்மணி
சொன்னது,
"என் வாழ்க்கையில்
இரண்டு வாரம்
சமையலுக்கு
விடுமுறை கொடுத்த
கொரோனா-விற்கு
நன்றி"
இந்த உலகில்
பழங்குடி
சமுதாயத்தைக்
கண்டு பிடிப்பது
சுலபம்.
அவர்களின் கதையில்
அல்லது
பாடலில்,
ஏழு மலை தாண்டி ..
அல்லது
ஏழு கடல் தாண்டி ..
என்ற ஒரு வரி
நிச்சயம் இருக்கும்.
Friday, October 01, 2021
Thursday, September 30, 2021
Tuesday, September 28, 2021
Sunday, September 26, 2021
வசிக்கும் தெருவில்
பிறப்பு, கல்யாணம், இறப்பு
என்ற மூன்றையும்
ஒரே நாளில் பார்க்கிறார்;
இரண்டு நிகழ்வை
முகநூலிலும்
திருமண நிகழ்வில்
எடுத்த செல்பியை
இன்ஸ்டா-விலும்
பதிவு செய்கிறார்
இன்றைய
புத்தர்.
இக்கரைக்கு
அக்கரை பச்சை
என்கிறார்கள்.
இப்போது பச்சை
எங்கேயும் இல்லை.
சொல்ல மறந்துவிட்டேன்
கரையும் இல்லை.
Saturday, September 25, 2021
இந்த துக்கத்தில்
என் காதலி
என்னுடன் இல்லாதது
வருத்தம்தான்.
அதை விட வருத்தம்
எனக்கு காதலியே
இல்லை என்பது.
Friday, September 24, 2021
Thursday, September 23, 2021
Sunday, September 19, 2021
Friday, September 10, 2021
Sunday, September 05, 2021
Saturday, September 04, 2021
Tuesday, August 31, 2021
சின்ன சின்ன
ஆசை;
நான் சுவாசிக்க
ஆக்சிஜன் கொடுத்த
ஒரு மரத்தையாவது
என் வாழ்நாளில்
கண்டுபிடிக்க வேண்டும்.
Monday, August 30, 2021
Sunday, August 29, 2021
சூரிய கிரகணம்
காரணமாக
எல்லா பெரிய கோயில்
நடையும் சாத்தப்படுகிறது;
முச்சந்தியில் சூரியனின் சுரீர்
ஒளி படுகிறது;
பிள்ளையார்
கோபமாக பார்க்கிறார்;
நான் பார்த்தும் பார்க்காத மாதிரி
கடந்து செல்கிறேன்!
Sunday, August 22, 2021
Thursday, August 19, 2021
Sunday, August 15, 2021
Wednesday, August 11, 2021
Friday, August 06, 2021
வானொலியில்
ஒலித்த அந்த பாடல்
சுமாராகத்தான்
இருந்தது;
ஆனால்
அந்த பாடலை
விரும்பிக் கேட்ட
நேயர்களின்
ஊர் பெயர்கள்
அவ்வளவு அழகு.
Thursday, August 05, 2021
பத்து வார்த்தை
கோர்வையாக கொடுத்தால்
என்ன
குறைந்தா போய்விடுவாய்
என்றேன்;
பதிலேதும் சொல்லாமல்
எல்லா வார்த்தையையும்
வைத்துக்கொண்டு
அலமாரியில் அமர்ந்திருக்கிறது
அகராதி.
Sunday, August 01, 2021
Friday, July 30, 2021
குறைந்தது 10 நபர்களுக்கு
பார்வேர்ட் செய்யவேண்டும்;
இல்லையென்றால்
தினமும்
உங்கள் கைபேசிக்கு
ஒரு கவிதை
அனுப்பி வைக்கப்படும்.
Thursday, July 29, 2021
வீட்டு மரக்கதவில்
ஒரு பட்டாம்பூச்சி
அமர்ந்திருந்ததைப்
பார்த்தேன்;
கதவுக்கு முன்
மரமாக இருந்தபோது
என்ன கதையோ
இவைகளுக்குள்
என்று,
பட்டாம்பூச்சி நகரும்வரை
கதவை திறக்காமல்
அங்கேயே
அமர்ந்திருக்கிறேன்.
Wednesday, July 28, 2021
Friday, July 23, 2021
ஆண்டு - 2500
ஏலியன்கள்,
மனிதர்களை
மனிதனாகப்
பார்க்காமல்
ஸ்மார்ட் குரங்காகவே
பார்ப்பதை
எதிர்த்து போராடவேண்டும்
தோழர்களே.
Thursday, July 22, 2021
Wednesday, July 21, 2021
மறுபிறப்பு பற்றிய
திருக்குறள் படிக்கும்போது
தோன்றுவது,
"நான் எத்தனை
ஜென்மமாக
இந்த குறளை
படித்துக் கொண்டு
இருக்கிறேன்"
Sunday, July 18, 2021
Saturday, July 17, 2021
Wednesday, July 14, 2021
Tuesday, July 13, 2021
Monday, July 12, 2021
Saturday, July 10, 2021
Thursday, July 08, 2021
Wednesday, July 07, 2021
அடுத்த வருடம் முதல்
வானவில் பார்த்தால்
18% ஜிஎஸ்டி என்று
அரசு அறிவித்ததும்,
பலபேர் முதல்முறையாக
தேடித்தேடி
வானவில் பார்க்கிறார்கள்.
Monday, July 05, 2021
Monday, June 28, 2021
ஒருவர் அவரை இறைத்தூதர்
என்கிறார்;
ஒருவர் இறைவனின் அவதாரம்
என்கிறார்;
பலர் ஆராதனை எல்லாம்
செய்கிறார்கள்;
ஆனால்,
ஒரு குழந்தை
"bad touch" என்கிறது.
Friday, June 25, 2021
Thursday, June 24, 2021
Wednesday, June 23, 2021
Tuesday, June 22, 2021
காதல் என்கிற உணர்வை
சொற்களுக்குள் அடக்கி
கவிதை எழுதுவது
என்பது,
'டைகர்' க்கும் &
'டைகர் பிஸ்கட்' க்கும்
போடும் முடிச்சி.
சுதந்திரம் என்பது,
நாக்கு சம்பந்தப்பட்டது அல்ல;
மூக்கு சம்பந்தப்பட்டது.
அதாவது பேசுவது அல்ல
சுதந்திரம்;
"சுவாசிப்பது!"
Monday, June 21, 2021
கைப்பேசியை
என்ன செய்தும்
பலனில்லை;
சார்ஜ்-ஜில்
போடுவதற்கு
முன்பு வரை கூட
நன்றாகத்தான்
இருந்தது.
யோசித்து பார்த்தால்,
இன்று காலை
அது
என் முகத்தில்தான்
விழித்தது.
Sunday, June 20, 2021
எல்லோரும் கோலத்தின் அழகை
இரசித்துக் கொண்டிருக்கையில்,
கோலத்தில் சிறைப்பட்டிருக்கும்
புள்ளிகள்
என்னையே பார்த்துக்கொண்டிருந்தன!
Saturday, June 19, 2021
Friday, June 18, 2021
நான் ரொம்ப பிஸி;
அப்படிதான் ஒருநாள்
என் தாத்தாவின்
கொள்ளு தாத்தாவிற்கு
ஒரு பெயர் வைத்தேன்.
நானே ஒரு நாளை தேர்வுசெய்து
அனைவருக்கும் கேக் கொடுத்து
அவருக்கு பிறந்தநாள்
கொண்டாடினேன்;
இப்போதுகூட அவருக்கு
ஒரு தேதி முடிவுசெய்து
திதி கொடுக்க ஒரு அய்யரை
பார்க்க சென்றுக்கொண்டு இருக்கிறேன்.
நான் ரொம்ப பிஸி!
Thursday, June 17, 2021
இரயில் பயணத்தில்
நம் கூடவே
ஓடிவந்த மரங்கள்
எப்போது
அங்கேயே நிற்கிறதோ,
அப்போது நாம்
ஓட ஆரம்பிக்கிறோம்.
Sunday, June 13, 2021
என்னால் எவ்வளவு முடியுமோ
அவ்வளவு பார்த்துக் கொள்கிறேன்;
என்னை நம்பி இரு.
இல்லையென்றால், மயிரே போனது
என்று நான் திரும்பிகூட
பார்க்காமல் சென்றுவிடுவேன்
என்று கோவமாக சொல்லிவிட்டேன்.
(இன்று காலை எனக்கும் & என் தலைமுடிக்கும்
நடந்த உரையாடல் இது)
நடந்த உரையாடல் இது)
Friday, June 11, 2021
எல்லா 'பாஸ்வேர்டு'-யும்
வைத்தாகிவிட்டது;
அடுத்த 'பாஸ்வேர்ட்'-க்கு
அவசரமாக யாரையாவது
காதலித்தாகவேண்டும்!
Wednesday, June 09, 2021
மல்லிகை பூவை பார்க்கும்போது
எனக்கு இரண்டு பிரச்சினைகள்:
அதற்கு அதன் பெயர்
'மல்லிகை' என்று தெரியாது.
இரண்டாவது அதன் வாசம்
கூட அதற்கு தெரியாது.
Tuesday, June 08, 2021
உன்னிடம் சொல்லாமலே
நான் "பிரேக் அப்"
செய்துவிட்டேன்;
எப்படி
உன்னிடம் சொல்லாமலே
உன்னைக் காதலித்தேனோ
அப்படி.
Monday, June 07, 2021
பழக்கதோஷம்
நிலவில் குடியேறி
300 வருடம் ஆகிறது.
பூமியை காட்டி
"பூமி சோறு" என்று
குழந்தைகளுக்கு சொல்லாமல்
இன்னும் "நிலா சோறு" என்றே
சொல்கிறார்கள்.
Saturday, June 05, 2021
பத்து வருடங்களுக்கு பிறகு
நான் காதலித்த
பெண்ணை கண்டேன்;
அவள் கண்டு கொள்ளவே
இல்லை;
பத்து வருடங்களுக்கு முன்பும்
அவள் அப்படித்தான்!