Monday, June 28, 2021

ஒருவர் அவரை இறைத்தூதர்
என்கிறார்;
ஒருவர் இறைவனின் அவதாரம் 
என்கிறார்;
பலர் ஆராதனை எல்லாம் 
செய்கிறார்கள்;
ஆனால், 
ஒரு குழந்தை 
"bad touch" என்கிறது.

Friday, June 25, 2021

கோபத்தை 
கோபமாக மட்டும் 
வெளிக்காட்ட 
தெரிந்தவர்கள் 
முட்டாள்கள்.

Thursday, June 24, 2021

பள்ளிக்கூடம் முடித்து 
கல்லூரி சென்று 
பட்டம் வாங்கியபின்,
படிப்பு 
ஆரம்பமாகிறது.

Wednesday, June 23, 2021

 மூளை
தனக்குத்தானே 
பெயர் 
வைத்துக்கொண்டது
"மூளை"

Tuesday, June 22, 2021

காதல் என்கிற உணர்வை 
சொற்களுக்குள் அடக்கி 
கவிதை எழுதுவது 
என்பது,
'டைகர்' க்கும் &
'டைகர் பிஸ்கட்' க்கும் 
போடும் முடிச்சி.
சுதந்திரம் என்பது, 
நாக்கு சம்பந்தப்பட்டது அல்ல;
மூக்கு சம்பந்தப்பட்டது.
அதாவது பேசுவது அல்ல 
சுதந்திரம்;
"சுவாசிப்பது!"  

Monday, June 21, 2021

கைப்பேசியை  
என்ன செய்தும் 
பலனில்லை;
சார்ஜ்-ஜில்
போடுவதற்கு 
முன்பு வரை கூட 
நன்றாகத்தான் 
இருந்தது. 
யோசித்து பார்த்தால், 
இன்று காலை 
அது 
என் முகத்தில்தான் 
விழித்தது.

Sunday, June 20, 2021

எல்லோரும் கோலத்தின் அழகை 
இரசித்துக் கொண்டிருக்கையில்,
கோலத்தில் சிறைப்பட்டிருக்கும்
புள்ளிகள் 
என்னையே பார்த்துக்கொண்டிருந்தன!
அகத்தின் 
அழகு 
முகநூலில் 
தெரியாது!

Saturday, June 19, 2021

நதியின் தாகம் 
தீர்ந்துபோகிறது,
நிலவின் நிழல் 
நதியில் விழும்போது!

Friday, June 18, 2021

கணினிக்கு புரிந்தது 
புத்தர் 
அல்லது 
ஆதிசங்கரர்
மட்டும்தான்.
அதாவது 
பூஜ்யம் 
அல்லது 
ஒன்று :-)
நான் ரொம்ப பிஸி;
அப்படிதான் ஒருநாள் 
என் தாத்தாவின் 
கொள்ளு தாத்தாவிற்கு 
ஒரு பெயர் வைத்தேன்.
நானே ஒரு நாளை தேர்வுசெய்து 
அனைவருக்கும் கேக் கொடுத்து 
அவருக்கு பிறந்தநாள் 
கொண்டாடினேன்;
இப்போதுகூட அவருக்கு 
ஒரு தேதி முடிவுசெய்து 
திதி கொடுக்க ஒரு அய்யரை 
பார்க்க சென்றுக்கொண்டு இருக்கிறேன்.
நான் ரொம்ப பிஸி!

Thursday, June 17, 2021

இரயில் பயணத்தில் 
நம் கூடவே 
ஓடிவந்த மரங்கள் 
எப்போது 
அங்கேயே நிற்கிறதோ,
அப்போது நாம் 
ஓட ஆரம்பிக்கிறோம்.

Sunday, June 13, 2021

'சாமி பூ' என்று
அர்ச்சகர் என்னிடம் தர 
அம்மனிடம் கொடுங்கள் என்று 
அவளை நோக்கி 
கை காட்டினேன்.
என்னால் எவ்வளவு முடியுமோ
அவ்வளவு பார்த்துக் கொள்கிறேன்;
என்னை நம்பி இரு. 
இல்லையென்றால், மயிரே போனது 
என்று நான் திரும்பிகூட 
பார்க்காமல் சென்றுவிடுவேன் 
என்று கோவமாக சொல்லிவிட்டேன்.
(இன்று காலை எனக்கும் & என் தலைமுடிக்கும் 
நடந்த உரையாடல் இது)

Friday, June 11, 2021

எல்லா 'பாஸ்வேர்டு'-யும்
வைத்தாகிவிட்டது;
அடுத்த 'பாஸ்வேர்ட்'-க்கு 
அவசரமாக யாரையாவது 
காதலித்தாகவேண்டும்!
எனக்கு பிடித்தவை
இரண்டு.
ஒன்று இரண்டாவது.
இரண்டு ஒன்றாவது.

Wednesday, June 09, 2021

மல்லிகை பூவை பார்க்கும்போது
எனக்கு இரண்டு பிரச்சினைகள்:
அதற்கு அதன் பெயர்
'மல்லிகை' என்று தெரியாது.
இரண்டாவது அதன் வாசம்
கூட அதற்கு தெரியாது.

Tuesday, June 08, 2021

உன்னிடம் சொல்லாமலே 
நான் "பிரேக் அப்"
செய்துவிட்டேன்; 
எப்படி 
உன்னிடம் சொல்லாமலே 
உன்னைக் காதலித்தேனோ 
அப்படி.
என் இறுதி ஊர்வலத்திற்கு 
வந்தவர்கள் 
பத்திரமாக வீடு போய் 
சேரவேண்டும் 
என்பதே என் 
"இறுதி ஆசை"
புத்தகம் வாங்கியவுடன்
பெயருக்கு பதில்,
போன் நம்பர் எழுதுகிறான் 
21-ஆம் நூற்றாண்டு மனிதன்.
நிலா, நதி, தென்றல்,
தமிழ், காதல், மலர் - இதனைத்
தவிர்த்து எழுதுவது 
 'ஆர்கானிக்' கவிதை!

Monday, June 07, 2021

பழக்கதோஷம்

நிலவில் குடியேறி 
300 வருடம் ஆகிறது.
பூமியை காட்டி 
"பூமி சோறு" என்று 
குழந்தைகளுக்கு சொல்லாமல் 
இன்னும் "நிலா சோறு" என்றே 
சொல்கிறார்கள்.

Saturday, June 05, 2021

ஒரு பெண்
ஆண் செய்யும்
அனைத்தும் செய்து
மீண்டும் பெண்
ஆகிறாள்!
பத்து வருடங்களுக்கு பிறகு
நான் காதலித்த
பெண்ணை கண்டேன்;
அவள் கண்டு கொள்ளவே
இல்லை;
பத்து வருடங்களுக்கு முன்பும்
அவள் அப்படித்தான்!

Thursday, June 03, 2021

கொரோனா

பல சொந்தங்கள்

இப்போது,

'தூரத்து' சொந்தங்கள்.

Wednesday, June 02, 2021

கவிதைகள் 
காதல் 
கொள்ளும்போது 
சொற்கள் 
புரண்டு படுத்தன!
நான் நலமாகத்தான் 
இருக்கிறேன்;
என் நிழலுக்கு 
'கொரோனா' 
கோவில் கோபுரம் 
நகர்ந்து வந்தால்
அதற்கு  
"தேர்"
என்று பெயர்!
 எங்கள் ஊர் 
வார சந்தையில் 
அறிமுகப்படுத்தப்பட்டது 
"பீட்சா"
பேசுவதற்கும்,
பேசாமல் இருப்பதற்கும் 
இடையில் இருப்பது
ஒரு சொல்.