Friday, April 28, 2006

'வறுமையின் நிறம் சிவப்பு'
என்றார்கள் அன்று.
வறுமை அதிகம் ஆனதால்
இன்று அதன் நிறம்
"வானவில்"

Wednesday, April 26, 2006

தொட்டு விடும் தூரத்தில் வானம்
இரவில் கனவில்,
தொடாத தூரத்தில் பூமி
பகலில் நிஜத்தில்!!!!!!!

Tuesday, April 25, 2006

கடவுள் எதிர் பார்க்கிறாரோ
இல்லையோ,
என் வரவை எதிர்பார்க்கும்
கோவில் வாசலில் அமர்ந்திருக்கும்
"பிச்சைக்காரர்கள்"...