Sunday, October 31, 2021

சிரிக்க தெரிந்தவரிடம் 
நட்பு கொள்ளும்போது, 
நமக்கு கிடைப்பது 
இரண்டு 
நண்பர்கள்.

Saturday, October 30, 2021

பாட்டு 
ஆரம்பிக்கும் இடம் 
ஒன்றுதான்;
ஆனால் 
முடியும் இடத்தை 
கேட்பவன் 
தீர்மானிக்கின்றான்.
காதல் 
என்று சொல்லும்போது 
உதடுகள் 
ஒட்டுவதில்லை;
காமம் 
என்று சொல்லும்போது 
உதடுகள் 
ஒட்டும்.

Thursday, October 28, 2021

அவன் 
முள் செடியைத்தான் 
விற்கிறான்;
நான் 
ரோஜா செடியை 
வாங்கினேன்.

Wednesday, October 27, 2021

வார்த்தைகள் 
இல்லாதது 
'மௌனம்'
என்றால் 
எதற்கு 
அந்த 
வார்த்தை 
மட்டும்.

Monday, October 25, 2021

மூன்று நிறம் 
தெளிவாகவும் 
ஒரு நிறம் 
மங்களாகவும் 
இருக்கிறது;
வயதான 
வானவில்.

Friday, October 22, 2021

கடலை 
குளிப்பாட்டும் 
மழை.
நுரையானது 
அலை.

Monday, October 18, 2021

வண்ணத்துப்பூச்சி 
பற்றிய கவிதையில்
வர்ணம் பூசிக்கொண்டு
அமர்ந்திருக்கின்றன 
வார்த்தைகள்.

Friday, October 15, 2021

வீட்டு வாசலில் 
பூசணிக்கு பதில் 
புத்தகத்தைக் 
கட்டுங்கள்.
தலையில் நன்றாக 
"நச்" என்று 
இடிக்கட்டும்.

Monday, October 04, 2021

மழையின் 
முதல் துளி-க்கு 
கிடைக்கும் 
ஆரவாரம்,
பாவப்பட்ட 
கடைசி துளி-க்கு 
கிடைப்பதே இல்லை.

Sunday, October 03, 2021

14 நாட்கள் 
தனிமைப் படுத்தப்பட்டு 
திருப்பி வந்த 
60 வயது பெண்மணி 
சொன்னது,
"என் வாழ்க்கையில் 
இரண்டு வாரம்  
சமையலுக்கு 
விடுமுறை கொடுத்த 
கொரோனா-விற்கு 
நன்றி"
இந்த உலகில்
பழங்குடி 
சமுதாயத்தைக் 
கண்டு பிடிப்பது 
சுலபம்.
அவர்களின் கதையில் 
அல்லது 
பாடலில்,
ஏழு மலை தாண்டி ..
அல்லது 
ஏழு கடல் தாண்டி ..
என்ற ஒரு வரி 
நிச்சயம் இருக்கும்.

Friday, October 01, 2021

நான் திண்ணையில் 
அமர்ந்திருக்கிறேன்;
திண்ணையும் 
அமர்ந்திருக்கிறது.
அந்தமான் 
பழங்குடி மக்களை 
பார்க்க சென்றேன்;
அவர்கள் 
என்னை எப்படி 
பார்த்தார்கள் என்று 
தெரியாது.