Tuesday, August 31, 2021

முதன் முதலாக 
மயிலைப் பார்த்த 
குழந்தை சொன்னது, 
'மேக்கப் கொஞ்சம் 
அதிகம்ல'
சின்ன சின்ன 
ஆசை;
நான் சுவாசிக்க 
ஆக்சிஜன் கொடுத்த 
ஒரு மரத்தையாவது 
என் வாழ்நாளில் 
கண்டுபிடிக்க வேண்டும்.

Monday, August 30, 2021

ஆலமரத்திற்கும், 
அபார்ட்மெண்ட் 
தொட்டி செடிக்கும் 
தூது 
இந்த வண்ணத்துப்பூச்சி.

Sunday, August 29, 2021

மழையும் 
பெய்கிறது,
வெயிலும் 
இருக்கிறது
'அர்த்தநாரீஸ்வர நாள்'
சுதந்திரம் 
பற்றிய 
மரபுக் கவிதையில் 
கைதிகளாய்
'அணி'வகுத்து 
நின்றன
வார்த்தைகள்.

சூரிய கிரகணம்

காரணமாக 

எல்லா பெரிய கோயில்

நடையும் சாத்தப்படுகிறது;

முச்சந்தியில் சூரியனின் சுரீர்

ஒளி படுகிறது;

பிள்ளையார் 

கோபமாக பார்க்கிறார்;

நான் பார்த்தும் பார்க்காத மாதிரி

கடந்து செல்கிறேன்!

Sunday, August 22, 2021

ஆயிரங்கால் மண்டபத்தில் 
நின்று கொண்டிருக்கிறேன்;
இப்போது 
ஆயிரத்து இரண்டு 
கால்கள்.

Thursday, August 19, 2021

'காடு' 
குறைந்துக் கொண்டே 
வந்து 
'க' என்றானது.

Sunday, August 15, 2021

மழையைப் பார்க்கிறது;
மழையில் நனைகிறது;
ஆனால் 
உணர்வதே இல்லை 
'எருமை மாடு,
எருமை மாடு' .

Wednesday, August 11, 2021

முகநூல் நண்பரை 
நேரில் சந்தித்தேன்;
"லைக்" என்று 
சொல்லிவிட்டு 
போனார்.

Friday, August 06, 2021

வானொலியில் 
ஒலித்த அந்த பாடல் 
சுமாராகத்தான் 
இருந்தது;
ஆனால் 
அந்த பாடலை 
விரும்பிக்  கேட்ட 
நேயர்களின் 
ஊர் பெயர்கள் 
அவ்வளவு அழகு.

Thursday, August 05, 2021

பத்து வார்த்தை 
கோர்வையாக கொடுத்தால் 
என்ன 
குறைந்தா போய்விடுவாய் 
என்றேன்;
பதிலேதும் சொல்லாமல் 
எல்லா வார்த்தையையும் 
வைத்துக்கொண்டு 
அலமாரியில் அமர்ந்திருக்கிறது 
அகராதி.

Sunday, August 01, 2021

எதையாவது பிடித்துக்கொள்ளுங்கள் 
என்கிறார்கள்;
எதையும் பிடிக்கக்கூடாது 
என்பதை 
பிடித்துக் கொள்கிறேன்.
நான் சிக்னலில் 
நிற்பதா வேண்டாமா 
என்பதை 
எனக்கு பின்னால் 
வருபவனின் வேகம் 
தீர்மானிக்கிறது.