சரியான
நேரத்திற்கு
வந்து விட்டோம்;
நேரம்
சரியில்லை
என்று
காத்திருக்கிறோம்.
ஒரு பாடல்
ஏன் பிடித்திருக்கிறது
என்று சொல்ல
என்னிடம் காரணம் இல்லை.
எனக்கு பிடித்தவர்க்கு
அந்தப் பாடல்
பிடித்திருக்கிறது
அவ்வளவுதான்.
ஆறு வருடங்களாக
'பொறுமை' என்ற
தலைப்பில்
ஒரு கவிதை
எழுதுகிறேன்.
எல்லோரும்
எங்கே, எப்போது என்று
புது பேனா
வாங்கியவுடன்,
எழுதுகிறதா என்று
கவிதை
எழுதிப் பார்த்தேன்!
எப்படியோ
வேலை
வாங்கியாச்சு;
இதற்கு மேல்
கண்டிப்பாக
படிக்க வேண்டும்.