Wednesday, October 23, 2024

வீட்டிலிருந்து 
அனைவரையும் 
தப்பிக்க வைத்து 
கடற்கரைக்கு 
கொண்டு வந்தேன்;
இப்போது 
கடற்கரை மணலில் 
ஒரு வீடு தயாராகிறது. 
இப்போது இதிலிருந்து 
தப்பித்து 
வீடு செல்ல வேண்டும்.

Tuesday, October 08, 2024

பௌர்ணமியில் 
மலை சுற்றும்போது 
என்னுடனே 
வருகிறது 
இந்த நிலவு. 
பாவம்,
அதற்கு என்ன 
வேண்டுதலோ!

Tuesday, October 01, 2024

கண்ணால் பார்ப்பதும் பொய்,
காதால் கேட்பதும் பொய்,
நேரில் சென்று 
சாப்பிட்டு பார்ப்பதே மெய்.