Friday, November 21, 2008

வீட்டில் சண்டை !!!
என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டு நடக்க ,
சட்டென்று இரண்டு பூனையில் ஒன்று,
நான் நடந்த பாதையின் குறுக்கே சென்றது ...
நல்ல வேலை, சண்டை பெரிதாகாமல் முடிந்தது !!
ஓ !!! சொல்ல மறந்துட்டேனே,
நான் வேடிக்கை பார்த்தது
பூனைகள் வீட்டில் நடந்த சண்டையை !!!!!!

Wednesday, March 12, 2008

"எதையும் வித்தியாசமாக
செய்ய நினைத்து
முடிவில்
சராசரிக்கும் சராசரியாக
செய்து முடிப்பதில்
எனக்கு நிகர் நான்தான் " - என்று
புலம்பிக் கொண்டிருக்கும் போது
என் அண்ணன் புன்னகை
செய்து விட்டு சென்றான் ...
மறுநாள் என் நண்பன் வந்து
இதையே என்னிடம் சொல்ல ...
" எல்லோரும் இந்த உலகத்தில்
இப்படி தானோ " - என்று
ஒரு எண்ணம் தோன்றியது !!!!
அது சரி ...
நீங்கள் அப்படி ??????

Sunday, November 18, 2007

ஆண்டவா !!!
எங்கள் வாழ்க்கையில்
"ஒளி" ஏற்றுவாயோ
இல்லையோ!!!
நாங்கள் ஏற்றுகிறோம்
உனக்காக
"கார்த்திகை தீபம்" .

Tuesday, February 13, 2007

கால் புள்ளியாகவும்,
அரை புள்ளியாகவும்
வளர்ந்த நம் உறவுக்கு
கடைசியாக வைக்கப்பட்டது
முற்றுப்புள்ளி.
"உன் திருமணம்"

Wednesday, January 17, 2007

முன்பின் தெரியாத நபர்
கை நீட்டீய உடன்
வண்டியில் அவரை
ஏற்றிக்கொண்டேன்;

ஐந்து நிமிடம்
நீடித்த நட்பு
அவர் இறங்கும் இடம்
வந்ததும் முற்றுப்பெற்றது;

அவர் கொடுத்த "நன்றி" யை
புன்சிரிப்புடன் வாங்கிக் கொண்டு
புறப்பட்டேன்;

சிறிது தூரம் சென்றதும்
என்னுடைய மணிப்பர்ஸை
தொட்டுப் பார்த்துக்கொண்டது
என் நல்ல மனது.....!!!!!!

Tuesday, July 18, 2006

21-ம் நூற்றாண்டின்
மிகச் சிறந்த கண்டுபிடிப்பு,
எல்லா குழந்தைகளுக்கும்
பிடித்த விளையாட்டு பொருளான
"செல்போன்".

Thursday, June 08, 2006

திருமணம் ஆகி
கால் நூற்றாண்டுக்கு
மேல் கடந்து விட்டது;
இதுவரை சிறிய
சண்டையோ (அ) சச்சரவோ
எங்களுக்குள் வந்ததில்லை!!!
மனைவி பெயர்
"கனவு".

Thursday, June 01, 2006

இயற்கையை நேசிப்பவன்
"ஏழு அறிவு" கொண்ட
மனிதன் ஆகிறான்.

Friday, May 26, 2006

தொலைக்காட்சியில்
அரட்டை அரங்கம் பார்ப்பேன்;
விசு-வின் பேச்சைக்
கேட்ப்பதற்காக இல்லை;
முடிவில் ஒளிப் பரப்பப்படும்
"வந்தே மாதரம்" பாடலுக்காக.

Thursday, May 18, 2006

கவிதைகளை பாடல்கள்
ஆக்கலாம்; ஆனால்
கனவுகளை??
ஏன் முடியாது
என்று நிருபித்த ஜிவன்,
திருமதி "எம்.எஸ்.சுப்புலட்சுமி" அவர்கள்.