Wednesday, June 24, 2026

அனைத்தையும்

பார்த்தே ஆக வேண்டும்

என்பதில்லை;

சிலவற்றை மட்டும்

சற்றே

உற்று நோக்கலாம். 

Friday, June 12, 2026

அழகான 

பொய்க்கு 

ஆயுசு 

அதிகம். 

Tuesday, June 09, 2026

ஒரு ரயில் மோதி
பட்டாம்பூச்சி ஒன்று
இறந்தது.

அதை நேரில் கண்ட
மேகம்,
மழையாக
அழுதுகொண்டிருந்தது.

எதுவும் அறியாமல்
பஜ்ஜி தின்றபடி,
இளையராஜா பாடல் கேட்டபடி
அவன் அமர்ந்திருந்தான்.

நனையாமல் 

பெய்யும் 

மழை போல 

நான் 

உன்னைக்

காதலிக்கிறேன்.

எல்லா வார்த்தைகளையும்

தூரத் தள்ளிவிட்டு,

தனிமையில் அமர்ந்திருக்கிறது

ஒரு வார்த்தை,

'பகை'.

Friday, June 05, 2026

ஒரு கண் 

தூங்க,

ஒரு கண் 

விழித்திருந்தது.

'பாதி தூக்கம்' 

என்கிறார்.

 நர்சரி செடிக்கும்,
வண்ணக் கோழிக்குஞ்சுக்கும்
உள்ள ஒற்றுமை;

இரண்டையும்
கொல்வது
அவற்றை
வாங்கியவர்கள்தான்.

புனிதங்கள்
ஒன்றையொன்று
காயப்படுத்துவதில்லை;

ஒரு புனிதமான
மரத்தை நோக்கி
ஒரு புனிதக் கல்லை
எறிந்து கொண்டிருக்கிறேன்.