Monday, May 16, 2011

பத்து ஆண்டுகள் கழித்து,
கல்லூரி பேராசிரியரை பார்த்ததும்,
பேசலாம் என்று நினைத்தேன் ;
என்னை எங்கு நியாபகம்
வைத்திருக்கப் போகிறார் என்று
பார்க்காதது போல் நகர்ந்து சென்றேன்;

அவருடைய 25 ஆண்டு
கல்லூரி வாழ்வில் குறைந்தது
பத்தாயிரம் மாணவர்களை-யாவது
சந்தித்து இருப்பார் ;
அதனால் என்னை எப்படி நியாபகம்
வைத்திருக்கப் போகிறார்
என்று நீயாயம் கற்பித்தது
என் மனது ;

பின் ஒரு நாளில்
யாரோ பெயர் சொல்லி கூப்பிட
திரும்பினால் அவரே தான், என் பேராசிரியர்.
பெயர் சொல்லியது மட்டும் இல்லாமல்,
முன்பொரு நாள் எனைப் பார்த்ததும்
நான் பிஸி-ஆகா இருந்ததால்
பேசமுடியவில்லையென்றும் ,
என் கல்லூரி வருடத்தை சொல்லி
மற்ற என் நண்பர்கள் பெயர் சொல்லி
நலம் விசாரித்தார் ...

நான் பதில் சொல்லாமல் "திரு திருனு "
பார்த்துக் கொண்டிருந்தேன் !!!!